தர்மத்தின் தலைவன், வருஷம் 16, சின்னதம்பி உள்ளிட்ட ஹிட் படங்கள் மூலம், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி தமிழ்த் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர், குஷ்பூ. தமிழைத் தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
முதன்முதலில் ஒரு நடிகைக்கென கோயில் கட்டப்பட்டதென்ற பெருமையும் குஷ்பூவிற்கு கிடைத்தது. பின், இயக்குநர் சுந்தர் சி-யை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கும் தாயானார் குஷ்பூ. நாளடைவில் சினிமா வாய்ப்புகள் குறையவே அரசியலுக்குள் களமிறங்கி அனல் தெறிக்கும் பேச்சுகளையும் அள்ளித் தெளித்து வருகிறார், குஷ்பூ.
சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், குஷ்பூ.
தன் உடல் எடையைக் குறைத்து, ஸ்லிம் ட்ரான்ஸ்பர்மேஷனில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி ஹார்ட்டின்களை அள்ளியது.
இந்நிலையில் தற்போது குஷ்பூ நடிகையாக வலம் வந்த ஆரம்ப காலத்தில், சக நடிகை ஃபாராக்கு கொடுத்த லிப்லாக் (LipLock) புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படத்துக்காக குஷ்பூ தன்பாலின ஈர்ப்பாளர் என விமர்சிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Athulya Ravi: 'அதுல்யாவுக்கு பச்சக்... பச்சக்...'; ரசிகரின் வெறித்தனம்!