ETV Bharat / sitara

நடன இயக்குநர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை! - நடன இயக்குநர் லலிதா ஷோபி

கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருது நடன இயக்குநர் லலிதா ஷோபிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

lalitha
lalitha
author img

By

Published : Oct 18, 2021, 5:43 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குனர் லலிதா ஷோபி. இவர் உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், சியான் விக்ரம், பிரபாஸ், ஜுனியர் என் டி ஆர், குஞ்சாக்கோ போபன், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்த படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கடந்தாண்டு இவர் நடன இயக்குநராக பணியாற்றிய `சுஃபியும் சுஜாதாயும்' மலையாள திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பலரது பாராட்டை பெற்றது.

lalitha
நடன இயக்குநர் லலிதா ஷோபி

மறைந்த நரணிபுழா ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது 51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்' படத்திற்காக நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடன இயக்குநர் லலிதா ஷோபி கூறுகையில், “இந்த விருதை நம்மை விட்டு மறைந்த இயக்குநர் நரணிபுழா ஷாநவாஸ் அவர்களுக்கு சமர்பிக்கிறேன். அவருடன் பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாதவை" என்றார்.

இதையும் படிங்க: பிரியங்கா சோப்ரா...கத்ரீனா கைப்பை கவர்ந்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' பாடல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.