அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் 'பெண்குயின்'. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்றுவந்தது.
கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்துமுடிந்தபின் இப்படத்திற்கு பெண்குயின் என்று பெயர் வைக்கப்பட்டது. இது கீர்த்திக்கு 24ஆவது படமாகும்.
தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. த்ரில்லர் ஜானரைச் சேர்ந்த இப்படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ் ஸ்டோன் பென்ச் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரித்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவில் இப்படமானது வெளிவரயிருக்கிறது.
இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் தனது சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் பணியாற்றிய படக்குழுவினர்களில் இந்த படத்தின் குழுவினர்கள் மிகவும் சிறந்தவர்கள். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பல இனிமையான அனுபவங்கள் ஏற்பட்டது. இந்த படத்தை திரையில் காண மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இதையும் வாசிங்க: கர்ப்பிணியாக மாறிய 'பெண்குயின்' கீர்த்தி சுரேஷ்!