நாடு முழுவதும் கரோனா தொற்றின் மூன்றாம் அலை வெகு வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த வரிசையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜன.18) கரோனா தொற்று நீங்கி குணமடைந்திருப்பதாக கீர்த்தி சுரேஷ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், “இப்போதெல்லாம் நெகட்டிவ் என்பது கூட பாசிட்டிவான விஷயமாக மாறிவிட்டது. உங்களது அனைவரின் அன்பு மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீங்கள் அனைவரும் சிறப்பான பொங்கல், சங்கராந்தியை கொண்டாடியிருப்பீர்கள் என நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். தொற்று குணமடைந்ததாக அறிவித்திருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'காசு, புகழ வைச்சு என்ன பண்ண?' - வருத்தத்தின் உச்சத்தில் ரஜினி ரசிகர்கள்?