தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநர் பட்டியலில் இருப்பவர் இயக்குநர் கே.பாலச்சந்தர். அவர் மறைந்தாலும் அவரின் திரைப்படங்கள் இன்னும் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் லிஸ்டில் ஒன்றாக உள்ளது.
இவரின் பிறந்தநாளை 9ம் தேதி திரை உலகத்தினர் சிறப்பாக கொண்டாடினர். அதேபோன்று அவரது ரசிகர்கள் பல்வேறு சமூக நலப்பணிகள் செய்து அவரது பிறந்த நாளை கொண்டாடினர்.
அந்தவகையில், கே.பி.90-மரம் நடும் சபதம் என்கிற தலைப்பில் இந்த வருடம் முழுவதும் கே.பாலசந்தர் ரசிகர்கள் மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, அவரது கணவர் கந்தசாமி இணைந்து முதல் இரு மரக்கன்றுகளையும், நன்கொடையாக பத்தாயிரம் ரூபாயை சங்க பொதுச் செயலாளரிடம் கொடுத்து உள்ளனர்.
மேலும் கலைமாமணி நடிகைகள் குமாரி சச்சு, ரேணுகாகுமரன், நடிகர்கள் ராஜேஷ், பூவிலங்குமோகன், ரகுமான், ராம்ஜி, குமரன், சிஹான் உசேன், டிபி கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதி, பொதுச் செயலாளர் உள்ளிட்ட பலர் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகளிடம் மரக்கன்றுகளை வழங்கினர்.