சென்னை: உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆர்டிஎம் இயக்கியுள்ளார். படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம் கோபி, சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தனியார் டிவி சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய சுரேஷ் ரிவி இந்தப் படம் மூலம் ஹீரோவாகியுள்ளார்.
போலீஸுக்கும், பொதுமக்களில் ஒருவராக இருக்கும் ஹீரோவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் படம் உருவாகியுள்ளது. டீஸர் காட்சியில் இடம்பெறும் அதிகாரத்தில் இருப்பவர் கை ஓங்கி இருக்கனும், அடிமட்டத்தில் இருக்கிறவன கை ஏந்திதான் நிக்கனும் மற்றும் காக்கில இருக்கிற வாட்ச்மேன பார்த்தாலும் 10 அடி தள்ளி நின்ன பப்ளிக் எதிர்த்து பேச சோஷியல் மீடியாதான் காரணம் போன்ற வசனங்கள் படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, திருச்சியில் டிராபிக் காவல் ஆய்வாளர் பைக்கில் சென்ற தம்பதியினரை எட்டி உதைத்து, அதில் பயணித்த கர்ப்பிணி பெண் உஷா இறந்துபோன நிஜ சம்பவத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து படத்தின் கதையும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறப்பட்டிருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.