லாஸ் ஏஞ்சல்ஸ்: குளிர் பானம் ஒன்றுக்கான விளம்பர இடைவெளியில் பேசிய கேட்டி பெர்ரி, வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல நீங்கள் மீண்டெழும் சக்தியுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல நீங்கள் மீண்டெழும் சக்தியுடன் இருக்க வேண்டும். உங்கள் துயரமான நேரங்களில், நான் இந்தத் துயரத்தில் இருந்து மீண்டெழுவேன் என நீங்கள் கூறுங்கள். அப்படி கூறுவது உங்களுக்கு மன நிம்மதியை அளிப்பதுடன். அதிலிருந்து மீண்டெழுவதற்கான சக்தியையும் கொடுக்கும் என கேட்டி பெர்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், கடினமாக உழைக்கும் தாய்மார்கள் குறித்து அவர், தாயாக இருப்பது ஒரு முழு நேரப் பணி கிடையாது. ஒரு தாய் வேலைக்கு சென்றால், அவர் தன் நிரந்தரப் பணியை விட்டுவிட்டது போல் பார்ப்பது தவறான புரிதல். உங்களுக்காக உழைக்கும் தாயை அழைத்து பாராட்டுங்கள் என கூறியுள்ளார்.