பாலிவுட் திரைத்துறையில் தனது நடிப்பு, கவர்ச்சியின் மூலம் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர் கத்ரீனா கைஃப். இவர், முன்னனி கதாநாயகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்துவருகிறார்.
சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பாக கத்ரீனா கைஃப் மாடலிங் செய்துவந்தார். சிறு வயதிலிருந்தே கத்ரீனா கைஃப் பல நிறுவனங்களுக்கு பேஷன் மாடலாக இருந்துள்ளார்.
![கத்ரீனா கைஃப்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12473374_j.jpg)
தொடர்ந்து, பூம் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.
தெலுங்கிலும் நடிகர் வெங்கடேஷுடன் சேர்ந்து மல்லீஸ்வரி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படமும் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படம் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு அங்கும் வசூலை வாரி குவித்தது.
![கவர்சி நாயகி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12473374_p.jpg)
இவர், 2005ஆம் ஆண்டு சல்மான் கானுடன் நடித்த ‘மேனே ப்யார் க்யூன் கியா’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. மேலும், இந்தப் படத்திற்காக ‘ஸ்டார்டஸ்ட்’ என்ற விருதையும் பெற்றார்.
![மேனே ப்யார் க்யூன் கியா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12473374_g.jpg)
பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் கத்ரீனா கைஃப் இன்று (ஜூலை 16) தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளுக்கு நண்பர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: viral video: பலூன் கேட்ச் - சமந்தாவுடன் சமத்தாக விளையாடும் நாய்..