அறிமுக இயக்குநர் அருள் இயக்கி தயாரித்திருப்பதோடு கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் 'காதம்பரி'. வித்தியாசமான திகில் படமாக உருவாகியுள்ள, இப்படத்தில் காஷிமா ரஃபி, அகிலா நாராயணன், சர்ஜுன், நின்மி, பூஷிதா, மகராஜன், முருகானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகன் அருள், அவரது நண்பர்கள் இணைந்து டாக்குமென்டரி படப்பிடிப்புக்காக, காட்டுப் பகுதிக்குச் சென்று கொண்டிருக்கும் போது, அவர்களுடைய கார் விபத்துக்குள்ளாகி விடுகிறது.
சிறிய காயங்களுடன் நடுக்காட்டில் சிக்கிக்கொள்ளும் நண்பர்கள், அந்தக் காட்டில் இருக்கும் வீடு ஒன்றுக்குச் செல்லும் போது, அங்கு வாய் பேச முடியாத பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் உதவி கேட்டு அந்த வீட்டில் தங்குகிறார்கள். வாய் பேச முடியாத பெரியவரின் செயல்கள் விசித்திரமாக இருப்பதால், சந்தேகமடையும் நண்பர்கள் வீட்டை சோதனையிடுகிறார்கள்.
![காதம்பரி திரைப்படம் வித்தியாசமான த்ரில்லராக வெளியாகியுள்ள காதம்பரி காதம்பரி Kathampari 2021 Kathampari Movie Kathampari Movie Review Kathampari Tamil Movie](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-kathambari-release-script-7205221_21032021140009_2103f_1616315409_868.jpeg)
அப்போது, கீழே அறை ஒன்றில் இருக்கும் மரப்பெட்டியில் சிறுமி ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்தச் சிறுமியைக் காப்பாற்றும் நண்பர்கள், அதன் மூலம் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொள்ள, அதில் இருந்து தப்பித்தார்களா?, அந்த சிறுமி யார்?, சிறுமியைப் பெரியவர் அடைத்து வைத்தது எதனால்? போன்ற கேள்விகளுக்கான விடை தான் படத்தின் கதை. இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: புதுமுக நாயகி ஸ்ருதி நாயரின் லேட்டஸ்ட் கிளிக்!