ETV Bharat / sitara

இறுதிகட்ட பணியில் கருணாஸின் 'ஆதார்'! - கருணாஸின் ஆதார் படப்பிடிப்பு

கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆதார்' திரைப்படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுதிகட்ட பணியில் கருணாஸின் 'ஆதார்'!
இறுதிகட்ட பணியில் கருணாஸின் 'ஆதார்'!
author img

By

Published : Feb 16, 2022, 4:08 PM IST

'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை இயக்கியவர் ராம்நாத் பழனி குமார். இவரது இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இதில் கருணாஸ், அருண்பாண்டியன், 'காலா' திலீபன், 'பாகுபலி' பிரபாகர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.

இவர்களுக்கு ஜோடியாக ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்' பொங்கலன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்படத்தின் பணிகள் நிறைவடைந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. 'ஆதார்' படத்தை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையையும் படக்குழுவினர் தொடங்கியிருக்கின்றனர்.

எளிய மனிதர்களின் வலியைப் பேசும் யதார்த்தப் படைப்பாக உருவாகியுள்ள 'ஆதார்' திரைப்படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக், ட்ரெய்லர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகவுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஷாருக்கான் மகளா இது ! லேட்டஸ்ட் கிளிக் இதோ..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.