குட்டிப்புலி, கொம்பன், மருது போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் முத்தையா. இவரது படம் என்றாலே என்னென்ன இருக்கும் என்பதை ரசிகர்கள் சுலபமாக யூகித்து விடுவார்கள்.
இவரது இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பன் திரைப்படம் வெற்றிபெற்றது. இதனையடுத்து இருவரும் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு முத்தையா படத்தில் நடிப்பார் என்றும்; இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் கார்த்தி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 14 Years Of Epic Chak De India: ஷாருக்கானா... கபீர்கானா?