ETV Bharat / sitara

ஓடிடிக்கு செல்கிறதா நரகாசூரன்? - சோனி லைவ்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘நரகாசூரன்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

karthik narens Naragasooran to release on OTT

author img

By

Published : Jul 17, 2021, 9:11 PM IST

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இவர் இரண்டாவதாக இயக்கிய திரைப்படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சுந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாக தாமதமானதால், அருண் விஜய்யை வைத்து ‘மாஃபியா’ என்ற திரைப்படத்தை கார்த்திக் இயக்கினார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

தற்போது தனுஷ், மாளவிகா மோகனனை வைத்து ‘D43' இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘நரகாசூரன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

‘தேன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் படங்களை வெளியிடுவதில் களம் கண்டுள்ள சோனி லைவில் ‘நரகாசூரன்’ வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: விருமாண்டி ஸ்டைலை பின்பற்றவுள்ள சூர்யா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.