ETV Bharat / sitara

பேரன்புக்காரன் கார்த்திக் நேத்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..! - Thotti Jeya

ஜிப்ஸி என்னும் சொல் சில நாட்களாக பிரபலமாகியுள்ளது. ஒரே இடத்தில் இருக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு பயணிப்பவர்களையும் நாடோடிகளையும் ஜிப்ஸி என அழைப்பார்கள். நிலம், நீர், காற்று என இயற்கையுடன் உறவாடும் ஒரு நாடோடி பயணம்தான் ஜிப்ஸிக்களின் பயணம். இலக்கில்லாத ஒரு பயணம் மேற்கொண்டு, வாழ்வை உணர்ந்து ஒரு பாடலை எழுதினால், அந்த பாடல்தான் ''லைஃப் ஆஃப் ராம்''. அந்தப் பாடலை எழுதிய கார்த்திக் நேத்தா பிறந்தநாள் இன்று, அவரைப் பற்றிய தொகுப்பு

கார்த்திக் நேத்தா
author img

By

Published : Aug 12, 2019, 8:19 AM IST

மனிதனுக்குள் புதைந்துகிடக்கும் உணர்வுகளை வெளிப்படுத்த மனம் தேடுவது கவிதையைத்தான். காதலிக்கு தனது எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு காதல் கடிதத்தை கவிதைகளால் நிரப்பி காதலை சொல்ல முயல்வோம். அது இத்யாதி இத்யாதியாய் கடந்து, தற்போது தமிழ் இசை பாடல் வரிகளால் காதலர்கள் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களிலும், ஃபேஸ்புக் பதிவிலும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

கார்த்திக் நேத்தா
கார்த்திக் நேத்தா

சிலர் காதலை இயற்கை என்பார்கள், சிலர் புனிதம் என்பார்கள். அவர்களுக்கு, "காதல் என ஒன்று கிடையவே கிடையாது. நாம் பிறந்தது எல்லாம் எதற்காக...? இந்த காதல் கீதல், கண்ணீர், பாட்டு, ஓவியம் இதெல்லாம் இருட்டுலயும், ஹோட்டல்யும், பார்லயும், பெட்லயும் முடியுறதுக்காக, எல்லாம் ஹார்மோன் சம்பந்தப்பட்டது. ஹெட்ரொஜன், ஈஸ்ட்ரோஜன், டெஸ்ட்ரோன், ப்ரோஜெஸ்ட்ரோன். வெறும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி. எக்ஸ் க்ரோமோசோம், வொய் க்ரோமோசோம், எக்ஸ் எக்ஸ், எக்ஸ் - வொய். அவ்ளோதான் மேட்டர்" என எழுத்தாளர் சுஜாதா ஒரு விளக்கம் அளித்திருப்பார்.

கார்த்திக் நேத்தா
கவிதையில் முத்தெடுக்க கடற்கரை வந்த கார்த்திக் நேத்தா

இவையனைத்தும் சரி என்றாலும், தமிழர்களின் மனம் என்றுமே காதலை இயற்கையான ஒன்றாக நினைக்கும். அன்பே காதலென ஏங்கும். இந்த அன்பைக் கொண்டாட எவ்வளவோ பாடல்கள் வந்திருந்தாலும், ஒரு பாடல் கடந்த வருடம் வெளியாகி இதுவரை தமிழ் சினிமாவில் வந்த கட்டமைப்புகளில் இருந்து விலகி தனித்துவத்துடன் இருந்தது. இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

கார்த்திக் நேத்தா
பேரன்புக்காரன் பேரானந்தத்தின் போது..

'அந்தாதி' எனத் தொடங்கும் அந்தப் பாடலை தமிழ்நாடே காதல் கீதமாக கொண்டாடியது. காதலைப் பற்றி காதலர்கள் கூறும் பாடல். காதல் எப்படிபட்டது, அது என்னவெல்லாம் செய்யும், காதல் கடவுளா அல்லது சாத்தானா, இல்லை அனுபவத்தால் வருவதா என காதலின் பல்வேறு படிநிலைகளை எடுத்துக்கூறும் வகையில் எழுதப்பட்டது. தமிழ் சினிமாவில் கவிதை சார்ந்த வரிகள் சில காலமாக குறைந்து வந்த நிலையில், முழுக்க கவிதையாலும், இயற்கையாலும் சூழப்பட்டது இந்த பாடல்.

''பேரன்பே காதல்
உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்
சதா, ஆறாத ஆவல்
ஏதேதோ சாயல் ஏற்றித் திரியும் காதல்
பிரத்யேக தேடல்
தீயில் தீராத காற்றில்
புல் பூண்டில் புழுவில்
உளதில் இலதில்''

காதலனுக்கு காதலியை ஏன் பிடிக்கும் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் பிடிக்கும், ஏதோ ஒன்று யாரும் காணாததைக் கண்டிருப்பார்கள். அந்த பிரத்யேக தேடல்தான் காதல். காதல் எங்கு இருக்கும், எப்படி இருக்கும் எனக் கேட்பவர்களுக்கு தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும் என்பது போல் தீ, காற்று, புல், புழு என இருப்பது இல்லாதது என அனைத்திலும் காதல் வாழ்ந்துகொண்டிருக்கும் என தொடக்கத்திலேயே எழுதியிருப்பார் கார்த்திக் நேத்தா என்னும் பேரன்புக்காரன்.

''நாம் இந்த தீயில்
வீடு கட்டும் தீக்குச்சி
நாம் இந்த காற்றில்
ஊஞ்சல் கட்டும் தூசி
நாம் இந்த நீரில்
வாழ்க்கை ஓட்டும் நீர்பூச்சி
நாம் இந்த காம்பில்
காமத்தின் ருசி''

இயற்கைதான் காதல் என்பதை மீண்டும் கூறும் இந்த வரிகளில், தீயானால் தீக்குச்சி.. காற்றானால் தூசி.. நீரானால் நீர்பூச்சி எனப் பயணிக்கும் காதல், காமம் இன்றி எவ்வாறு இருக்கும். காதலில் உடல் மீதான அன்பு மேலோங்கியே இருக்கும். அதன் ருசியை காதலர்கள் உணர்ந்துகொள்வதற்கும், புரிந்துகொள்வதற்கும், பகுத்தறிந்துகொள்வதற்கும் எழுதப்பட்ட வரிகள் இது.

கார்த்திக் நேத்தா
கார்த்திக் நேத்தா

இந்த பாடலுக்கு அடுத்தபடியாக 'லைஃப் ஆஃப் ராம்' என்னும் கதாநாயகனின் வாழ்வை கூறும் பாடல். அந்த பாடல் ’லைஃப் ஆஃப் கார்த்திக் நேத்தா’ என அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பார். இயற்கையைக் கொண்டாடும் கார்த்திக் நேத்தாவுக்கு இயற்கையோடு வாழும் மனிதனைப் பற்றி எழுத வேண்டும். தமிழ் சினிமாவில் இயற்கையை கொண்டாடும் பாடல்கள் மிகவும் குறைவு. வாழ்க்கையில் சோகத்தில் இருப்பவர்களுக்கு இயற்கை மீதும், வாழ்க்கை மீதும் அன்பை ஏற்படுத்தும் பாடலாக இது அமைந்தது.

கார்த்திக் நேத்தா
நண்பர்களுடன் கார்த்திக் நேத்தா

ஜிப்ஸி என்னும் சொல் சில நாட்களாக பிரபலமாகியுள்ளது. ஒரே இடத்தில் இருக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு பயணிப்பவர்களையும் நாடோடிகளையும் ஜிப்ஸி என அழைப்பார்கள். நிலம், நீர், காற்று என இயற்கையுடன் உறவாடும் ஒரு நாடோடி பயணம்தான் ஜிப்ஸிக்களின் பயணம். இலக்கில்லாத ஒரு பயணம் மேற்கொண்டு, வாழ்வை உணர்ந்து ஒரு பாடலை எழுதினால், அந்த பாடல்தான் ''லைஃப் ஆஃப் ராம்''.

''கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை'' என வாழ்வின் யதார்த்தத்தை கூறும் பாடல்.

''நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குமே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே''

நாம் வாழும் மொத்த வாழ்க்கையையும் இரண்டே வரிகளில் எழுதிவிட்டு போயிருப்பார். ''இருகாலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா'' என வாழ்க்கையில் அன்பு செலுத்த ஒரு ஜீவன் இருந்தால் போதும் என ஒரு வரியில் வேறு எந்த கவிஞர்களும் எழுதாத வரிகளை கொடுத்துவிட்டார். பட்டிதொட்டியெல்லாம் இந்த பாடல் ஒலித்தது. ஒருமுறை இந்தப் பாடலைப் பற்றி என் தோழியிடம் பேசியபோது, அவள் கூறிய வார்த்தைகள் இவை: தினமும் காலை எழுந்தவுடன் கேட்கும் முதல் பாடல் இது என லைஃப் ஆஃப் ராம் பாடலைக் கூறினாள்.

கார்த்திக் நேத்தா
கவிதையைத் தேடி கார்த்திக் நேத்தா

இந்த யாதார்த்த வாழ்க்கைக்கான வரிகளை கார்த்திக் நேத்தா கடந்த வருடத்தில் இருந்து எழுதவில்லை. இதை எழுதத் தொடங்கியது தொட்டி ஜெயா படத்தில் இடம்பெற்ற முதல் பாடலில் இருந்தே...

ஆகாயச் சூரியனை ரசிக்கும் நேத்தா
ஆகாயச் சூரியனை ரசிக்கும் நேத்தா

மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அசைக்க முடியாத இடத்தில் இருந்தும் கை ரிக்‌ஷா இழுக்கும் வழக்கம் இருந்தது. அதனைத்தான் தனது முதல் பாடலிலேயே எழுதினார் கார்த்திக். அந்த வரிகள், ''கம்யுனிஸ்ட் ஸ்டேட் என்ற பேச்சு தான். ரிக்‌ஷா தள்ளும் கொடுமைய மாத்துங்க'' என விளிம்புநிலை மக்களின் வாழ்வை யதார்த்தமாக பதியத் தொடங்கிவிட்டார் நேத்தா. அதையடுத்து சில பாடல்கள் எழுதினாலும் வெண்ணிலா கபடிக் குழு படத்தில் எழுதிய 'பட பட வென பறந்திட இன்று அடடா சிறகுகள் முளைக்கிறதே' பலருக்கும் இன்றும் பேவரைட். அந்தப் பாடலில் வரும் படபட, கடகட என இரட்டை கிழவியை சரியாக பயன்படுத்தியதாகட்டும், 'விரல்கள் பிடித்து நடந்திடும்போது வலிகள் யாவும் மறைகிறதே' என்னும் வரிகளாகட்டும், அவரின் எழுத்தாளுமைக்கு ஒரு சான்று. காதல் வந்த இளைஞன் செய்யும் செய்கைகளை எல்லாம் மிக அழகாகவும், ரசிகர்களுக்கு கனெக்ட் செய்யும் விதமாக எழுதிய பாடல் இன்றும் இளமையுடன் வலம் வந்துகொண்டிருக்கிறது.

கார்த்திக் நேத்தா
கார்த்திக் நேத்தா

பின்னர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியான ''நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'' படத்தின் ''ஓ கிரேஸி மின்னல்'' பாடலை யார் கேட்டாலும், சொக்கிப் போவார்கள். அதிலும் அந்தக் 'கண்ணாடி கண்ணில், உன் முகம் தானே கண்ணீரை சீனிமிட்டாய் செய்துவிட்டாய் நீயே' என்ற வரிக்கு ஃபேஸ்புக்கில் தனியாக ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.

நேத்தா
தாய் - தந்தையுடன் நேத்தா

இங்கே சினிமா பாடல்களை எளிமையாய் மக்கள் புழங்கும் மொழியில் வரிகளை கொடுத்தது நா.முத்துக்குமார் மட்டுமே. நா.முத்துக்குமாரின் பாடல்களை தனியாக எந்தவித மனப்பாடமும் செய்யத் தேவையில்லை. அதுவே தானாக மனதில் எறி தனி ராஜாங்கம் செய்துகொள்ளும். அதுபோலத் தான் கார்த்திக் நேத்தா எழுதும் வரிகள் எளிமையாக மக்கள் மொழியில் இருந்தது. கூடுதல் தகவல் என்னவென்றால் இவர் நா.முத்துக்குமாரின் சிஷ்யர் தான். முத்துக்குமாரின் எழுத்துநடை நேத்தாவிடம் பற்றிக்கொண்டது பெரிய ஆச்சரியமில்லை.

கவிதை தேடியபோது..
கவிதை தேடியபோது..

தொடர்ந்து எழுதிய என்தாரா என்தாரா பாடல், ''என்னோடு காதல் வந்து என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே'', நெடுஞ்சாலை படத்தில் தாமிரபரணி பாடலில் , ''மருதாணி இலபோல என் மனசா நெசக்குற அருக்காணி அழகா தான் என் உசுர குடிக்கிற'', எல்லாவற்றுக்கும் மேலாக ''காதலே காதலே தனிபெருந்துணையே கூட வா கூட வா போதும்...போதும்..'' என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நெருக்கமான வரிகளை கொடுத்த சொந்தக்காரர்தான் நேத்தா.

தற்போது விஜய் தேவரகொண்டா நடித்த ''டியர் காம்ரேட்'' படத்தில் இடம்பெற்ற ''ஆகாச வீடு கட்டும் உன் கண்ணிலே'' பாடலில் வரும் ''விழிகள் மலர்வதை ரசித்திட விரும்பி உறக்கம் போய்விடும் வீட்டுக்கு திரும்பி'', ''புலராத காலை தனிலே நிலவோடு பேசும் மழையில்.... புலரா காதலே புணரும் காதலே அலறாய் காதலே அலரும் காதலே'' என்ற வரிகள் நம் மனதில் குளிரை உணர வைக்க முடியும் என செய்து காட்டினார்.

ஆரம்பக் காலத்தில் நேத்தா சில பாடல்கள் எழுதியிருந்தாலும், அவரை திரைத்துறை அடையாளம் கண்டுகொண்டது பின்வரும் பாடலில்தான். அந்த பாடல் ‘வாகை சூட வா’ படத்தில் இடம்பெற்ற, ’போறானே போறானே’ என்ற பாடல்தான். இந்தப் பாடலை தவிர்த்துவிட்டு நேத்தாவின் வளர்ச்சியைப் பேச முடியாது.

ரகசியமாய் காதலிக்கும் ஒருவன் ஊரைவிட்டு தொடமுடியாத தூரம் செல்லும்போது, பெண் மனதில் ஏற்படும் தவிப்புதான் இந்தப் பாடல் வரிகள். கிட்டதட்ட ஊரைவிட்டு நிலாவுக்கு குடிபெயர்வது போன்ற தவிப்பை பெண் மனதில் குடித்தனம் இருந்து எழுதிய பாடல் தான் போறானே போறானே... இந்தப் பாடலை கேட்டுவிட்டு நிச்சயம் ஒரு பெண் கவிஞர்தான் இதனை எழுதியிருப்பார், என தேடிப் பார்க்கையில் கிடைத்த பெயர்தான் கார்த்திக் நேத்தா.

''அழகாய் நீ நெறஞ்ச அடடா பொந்துக்குள் புகைய போல'', ''உன்ன பாத்து பேசயில ரெண்டம் முறையா குத்த வச்சேன்'', ''மூக்கானங் கவுறப்போல உன் நினைப்பு சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு'', இதுபோன்ற வரிகள் தமிழ் சினிமாவில் புழங்கி பல வருடங்களாகிய நிலையில், மீண்டும் தனது பாடல் வரிகளுக்குள் புகுத்தி இளைஞர்களை கவர்ந்துசென்றார் நேத்தா.

இவையனைத்தையும் தாண்டி, சீதக்காதி படத்தில் வரும் உயிர் பாடல் தான் கார்த்திக் நேத்தா எழுதியதிலே மிகச்சிறந்த பாடல். இன்றும் நடிகர் விஜய் சேதுபதி எப்படி இந்த பாடலை எழுதினாய் என நேத்தாவை வியந்து பாராட்டுவாராம். ஏனென்றால், கலைக்காக வாழ்ந்த ஒரு மனிதன் இறக்கிறான் என்பதை, ஒரே வரியில் சொல்லிவிட்டு சென்றிருப்பார் நேத்தா.

ஆழத்தின் ஆழங்களை பார்த்த மெளனத்தினை
ஓசை ஜெய்ப்பதுண்டோ
காலத்தின் தூரம் வரை வேர்கள் விட்ட மரம்
சாவில் உதிர்வதுண்டோ
கலை சாவை மதிப்பதில்லை

கலைக்காகவே வாழ்ந்து மறைந்தவர்கள் என்றும் மக்கள் மனதில் வேராய் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். கலைக்கு மட்டுமே இருக்கும் ஒரு குணம். அது, இறப்பை ஒரு பொருட்டாவே மதிக்காது. காலம் கடந்தும் கலைஞர்கள் வாழ்வார்கள். அதனை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிதாக கூறிவிட்டார் கார்த்திக் நேத்தா. இதற்காகவே கார்த்திக் நேத்தாவை தமிழ் சினிமா கொண்டாடலாம்.

நல்ல கவிதை, நல்ல உவமை, மென் சோகம், இயற்கை, காமம் என அனைத்தையும் கொண்டாடும் வரிகள் காலம் கடந்து நிற்கும். கார்த்திக் நேத்தாவின் பாடல்கள் அனைத்தும் காலத்தைக் கடந்து நிற்கக் கூடிய பாடல்கள். பிறந்தநாளை கொண்டாடும் பேரன்புக்காரன் கார்த்திக் நேத்தாவுக்கு வாழ்த்துகள்..!

Intro:Body:

Karithick Netha Bday SPL

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.