’துருவங்கள் பதினாறு’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள ’நரகாசூரன்’ திரைப்படம் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது. இதற்கிடையில் அவர் தனுஷ் நடிக்கும் 43ஆவது படத்தை இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். அப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் நரேன் தனது பெயரை வைத்து யாரோ விளையாடுவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “யாரோ ஒருவர் எனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், போலியான செய்தி பரப்பிவருகிறார். அதாவது 9777017348 என்ற எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பி, என் படத்தில் நடிக்க வைப்பதாகவும், அதற்குப் பணம் செலுத்துமாறும் ஏமாற்றிவருகிறார். அதை நம்பி யாரும் பண கொடுக்க வேண்டாம். இதுபோன்ற செயலில் ஈடுபடும், அந்த நபர் நரகத்தில் தள்ளப்படுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இயற்கை அன்னையை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுங்கள் - அமிதாப் பச்சன்