'ஹீரோ' படத்தையடுத்து நடிகர் கார்த்தியை வைத்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் 'சர்தார்' படத்தை இயக்கி வருகிறார். 'சிறுத்தை' படததுக்குப் பிறகு நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் இதுவாகும்.
சர்தார் படப்பிடிப்பு
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஏற்கெனவே விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் கார்த்தி மூன்று நாள்கள் நடிக்க உள்ளார்.
பொன்னியின் செல்வன், விருமன்
மணிரத்னத்தின் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில் ஏற்கெனவே நடித்து வரும் கார்த்தி, தொடர்ந்து வரும் 16ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெற உள்ள அப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முத்தையா இயக்கத்தில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகும் விருமன் படப்பிடிப்பும் தொடங்கியுள்ள நிலையில், 18ஆம் தேதி முதல் அப்படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷின் ’செல்ஃபி’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு!