ETV Bharat / sitara

கார்த்தியின் சர்தார் படப்பிடிப்பு எப்போது? - karthi sardar shoot starts next week

“சிறுத்தை” படத்திற்கு பிறகு கார்த்தி மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் சர்தார். 'இரும்புத்திரை', 'ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய P.S.மித்ரன் இப்படத்தை இயக்குகிறார்.

karthi
karthi
author img

By

Published : Jul 6, 2021, 4:15 PM IST

சென்னை: கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

“சிறுத்தை” படத்திற்கு பிறகு கார்த்தி மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் சர்தார். 'இரும்புத்திரை', 'ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய P.S.மித்ரன் இப்படத்தை இயக்குகிறார். ஜிவி.பிரகாஷ் இசை அமைக்கிறார். சர்தார் எனும் பாரசீக சொல்லுக்கு தலைவன் அல்லது படைத்தளபதி என்று பொருள்.

இப்படத்தில் ராஷிகண்ணா மற்றும் ‘கர்ணன்’ ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், சிம்ரன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல இந்தி நடிகர் ஜன்கி பாண்டே (Chunky Panday) முதல் முறையாக தமிழ் படத்தில் வில்லன் வேடத்தில் தோன்றுகிறார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்‌ஷ்மன்குமார் இப்படத்தை மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு ஜார்ஜ் C வில்லியம்ஸ், எடிட்டிங் - ரூபன், கலை இயக்கம் - கதிர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. பின்னர் கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் 16ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டான் படத்துக்கு பிரேமம் லுக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.