ETV Bharat / sitara

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற கர்ணன் - latest cinema news

பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷின் 'கர்ணன்' திரைப்படம் விருது வென்று சாதனை படைத்துள்ளது.

கர்ணன்
கர்ணன்
author img

By

Published : Oct 19, 2021, 4:27 PM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் 'கர்ணன்'. இதில் ரஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கலைப்புலி தாணு தயாரித்த தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.

இத்திரைப்படம் வெளியான சமயத்தில், கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இருப்பினும் கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. மேலும் ஓடிடி தளத்தில் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியான இப்படத்தை பிற மொழிகளை சேர்ந்தவர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் 'கர்ணன்' திரைப்படம் பெங்களூரில் நடைபெற்ற இனோவோட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த இந்திய திரைப்படம் என்ற விருது வென்று சாதனை படைத்துள்ளது. அதேபோல் சிறந்த தென்னிந்தியத் திரைப்படத்துக்கான விருது ’கட்டில்’ படத்திற்குக் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: பெங்களூர் இனோவேட்டிவ் விழாவில் விருது வென்ற கட்டில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.