இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், 'கர்ணன்'. கலைப்புலி தாணு தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். அவர்களுடன் லால், யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
![கர்ணன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-karnan-dhanush-script-7205221_14022021111754_1402f_1613281674_307.jpg)
அதில், தனுஷ் கையில் விலங்கு மாட்டியுள்ளது போன்ற தோன்றியுள்ளார். அத்துடன் அவர் கைவிலங்குடன், நெற்றியில் ரத்த கரையுடன் உள்ளார். மேலும் இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்னும் இரண்டு மாதங்களில் கர்ணன் ரிலீஸ்?