ETV Bharat / sitara

கதை சொல்லியாக அவதாரம் எடுத்த இயக்குநர் அகத்தியனின் மகள் கனி! - கதை சொல்லியாக அவதாரம் எடுக்கும் இயக்குனர் அகத்தியனின் மகள் கனி

இயக்குநர் திருவின் மனைவியும் தேசிய விருது வென்ற இயக்குநர் அகத்தியனின் மகளுமாகிய கனி, தனது புத்தம் புது பயணத்தை 'ஒரு ஊர்ல ஒரு ராஜா' என்ற நிகழ்ச்சி மூலம் தொடங்கியுள்ளார்.

ஒரு ஊர்ல ஒரு ராஜா
ஒரு ஊர்ல ஒரு ராஜா
author img

By

Published : Jun 10, 2020, 4:44 PM IST

சமீபத்தில் யூ-ட்யூப் தளத்தில் Theatre D சேனலில் வெளியாகியுள்ள, 'ஒரு ஊர்ல ஒரு ராஜா' எனும் இந்நிகழ்ச்சி வரலாற்றை 'கதை சொல்லல்' முறையில் சொல்வதில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பு செய்து தயாரித்துள்ளார், இயக்குநர் திரு.

இதுகுறித்து கனி கூறுகையில், 'எனது பால்ய காலத்திலிருந்தே வரலாறு எனக்கு மிகவும் பிடித்த பாடம். வரலாற்றை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்த வகையில், மிகப்பெரும் கூட்டத்திற்கு வரலாற்றை கதை வடிவில் சொல்ல முடியும் என்பது மிகப்பெரிய வாய்ப்பு. இப்படித்தான் இந்த ஐடியா தோன்றியது. முன்பு பெரியவர்கள் எந்த ஒரு கதையையும் சிறுவர்களுக்குச் சொல்லும் போது, 'ஒரு ஊர்ல ஒரு ராஜா' எனத்தான் ஆரம்பிப்பார்கள். அப்படித்தான் இந்நிகழ்ச்சியின் தலைப்பும் அமைந்தது.

நான் வரலாற்றின் வழி ஒழுக்கத்தை கற்றுத்தரவே நினைக்கிறேன். வரலாற்றின் மூலம் நாம் அனைவரும் ஒழுக்கத்தைக் கற்றுப் பயன்பெறலாம். நம் நிலத்தின் வரலாற்றையும் மூதாதையர்களின் வரலாற்றையும் அறிந்து கொள்வதன் மூலம், நமது தென்னிந்திய கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் தெரிந்து கொள்ளலாம். வரலாற்றின் மூலம் நமது கடந்த காலத்தைக் கற்றுக்கொள்வதன் வழியே, நாம் பல நல்ல விசயங்களை கற்று, நமது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம். எனவே, தான் நான் நமது இந்திய வரலாற்றைத் தேர்ந்தெடுத்தேன்' என்றார்.

ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சி எத்தகைய வரவேற்பைப் பெறும் என்பதில் பெரும் குழப்ப மன நிலையில் தவித்திருக்கிறார், கனி. தற்போது வரலாற்றை மிக வித்தியாசமாக அணுகியதாக எண்ணற்ற பார்வையாளர்களின் பெருமை மிக்க பாராட்டுகளால் மகிழ்ச்சியில் திளைக்கிறார்.

'எல்லோரையும் போலவே இதனை பார்வையாளர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என மிகுந்த தயக்கத்தில் இருந்தேன். ஆனால், தற்போது நிகழ்ச்சியின் இரண்டு பகுதிகள் வெளியான பிறகு, பார்வையாளர்களின் இதயம் கனிந்த பாராட்டுகள் பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது.

இன்னும் இதே போல் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தகவல்கள் நிறைந்த நிகழ்ச்சிகளை செய்ய பெரும் ஊக்கம் கிடைத்திருக்கிறது' என கனித் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.