தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'தலைவி'. ஏ.எல். விஜய் இயக்கத்தில், கங்கனா ரனாவத் நடிப்பில் ஜூன் மாதம் 26ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக இருந்தது.
ஊரடங்கு காலத்தில் ஜோதிகா நடிப்பில் OTTயில் வெளியான 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தைப் போன்று இந்தப் படமும் OTTயில் வெளியாகும் என்று தகவல்கள் பரவின. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கங்கனா ரனாவத்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் 'தலைவி' திரைப்படத்தை இரண்டு பெரும் OTT நிறுவனங்கள் வாங்கியுள்ளன என்று கங்கனா தெரிவித்தார். இருப்பினும் தலைவி OTTயில் நேரடியாக வெளியாகாது என்றும் பெரிய திரையில்தான் முதலில் இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
இந்த திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி நடிக்கிறார். ஜெயலலிதா கதாபாத்திரத்துக்காக கங்கனா 10 கிலோ உடல் எடை கூடினார். மேலும் இந்தத் திரைப்படத்துக்காக கங்கனா தமிழும் பரதநாட்டியமும் கற்றார்.