ETV Bharat / sitara

ட்விட்டரில் இணையும் கங்கனா - உற்சாகத்தில் ரசிகர்கள்! - கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத், ட்விட்டர் தளத்தில் தனது அதிகாரப்பூர்வ கணக்கைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்
author img

By

Published : Aug 21, 2020, 7:20 PM IST

பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகைகளுள் ஒருவர் கங்கனா ரனாவத். எப்போதும் தனது கருத்துக்களை துணிச்சலாகப் பேசும் இவர், சுஷாந்தின் மரணத்திற்குப் பிறகு பாலிவுட்டில் நிலவி வரும் வாரிசு அரசியலை மீண்டும் கடுமையாக விமர்சித்து குரல் எழுப்பி வருகிறார்.

இந்நிலையில், ட்விட்டரில், கங்கனா குறித்த பதிவுகளும் அப்டேட்களும் இதுவரை ’டீம் கங்கனா ரனாவத்’ என்ற ட்விட்டர் கணக்கின் மூலம் பகிரப்பட்டு வந்த நிலையில் தற்போது, தான் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கைத் தொடங்கவுள்ளதாக கங்கனா அறிவித்துள்ளார்.

இச்செய்தி அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. "இத்தனை காலங்களாக என்னை ட்விட்டர் தளத்திற்கு பலரும் அழைத்தனர். ஆனால் அங்கு நேரம் செலவிடுவதில் எனக்கு விருப்பமில்லாததால் அதனை உபயோகிக்காமல் இருந்து வந்தேன்.

ஆனால், இப்போதுதான் எனக்கு சமூக வலைதளப்பக்கங்கள் மீது நம்பிக்கை வந்துள்ளது. சுஷாந்தின் மரண வழக்கு குறித்து சமூக வலைதளங்களில் அனைவரும் கொடுத்த குரல்கள்தான், சிபிஐ விசாரணை நடைபெறக் காரணமாக அமைந்தது. அதனால் ட்விட்டர் தளத்தில் இணைய நான் முடிவு செய்து விட்டேன்" என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.