ETV Bharat / sitara

காஞ்சனா 3 ட்ரைலர் : நெருப்ப கூட தொடலாம் ஆனா கருப்ப தொடக்கூடாது

author img

By

Published : Mar 28, 2019, 12:27 PM IST

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படமான 'காஞ்சனா 3' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இணையத்தை திகிலாக்கி வருகிறது.

Poster

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'முனி'. இதன் இரண்டாம் பாகம் 'காஞ்சனா' என்ற பெயரில் வெளிவந்தது.

இதை தொடர்ந்து டாப்ஸி, நித்யா மேனன் நடிப்பில் 'காஞ்சனா-2' திரைப்படமும் வெளியானது. இப்படத்தின் அணைத்து பாகங்களிலும் லாரன்ஸே கதாநாயாகன நடித்திருந்தார். வெளிவந்த இரண்டு பாகங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலைக் குவித்தன.

தற்போது இந்தப் படத்தின் 3-ம் பாகத்தை 'காஞ்சனா-3' என்று ராகவா லாரன்ஸ் இயக்கியும் நடித்தும் வருகிறார். மேலும் இப்படத்தை லாரன்ஸே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆன ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘காஞ்சனா 3' படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டரை பொங்கல் தினத்தன்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது. மேலும் ஏப்ரல் 19-ம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் படக்குழு தற்போது ‘காஞ்சனா 3' படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது. இதில் லாரன்ஸ் பஞ்ச் வசனங்களுடன் மாஸ் சண்டை காட்சிகளுடன் டபுள் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார்.

Intro:Body:

Kanchana 3 trailer unveiled

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.