ETV Bharat / sitara

'தலைவன் இருக்கின்றான்' குறித்து ஏ. ஆர்.ரஹ்மான் ட்வீட்! - கமல்

'தலைவன் இருக்கின்றான்' திரைப்படம் குறித்து கமல்ஹாசனுடன் இணைந்து லைவில் உரையாட இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.

kamal hassan and A R Rahman to go live about thalaivan irukkiran

author img

By

Published : Jun 9, 2020, 7:23 PM IST

'தேவர் மகன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவரவிருக்கும் திரைப்படம் 'தலைவன் இருக்கின்றான்'. கமல்ஹாசன் நடிக்கும் இத்திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்துக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார்.

தற்போதைய ஊரடங்கு காலத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் ரசிகர்களை சமூக வலைதளங்களில் லைவில் சந்தித்து, அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்தும் நேர்காணல்களில் பங்கேற்றும் வருகின்றனர்.

அந்த வகையில் 'தலைவன் இருக்கின்றான்' திரைப்படத்தில் இடம்பெறப்போகும் முக்கியமான விஷயங்கள் குறித்து லைவ் உரையாடல் ஒன்றை நிகழ்த்த நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த லைவ் உரையாடல் வரும் ஜூன் 11ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடைபெறவுள்ளதாக ஏ. ஆர். ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க... 'ஓ சட்டை மேலே எவ்வளவு பட்டன்ஸ்' - மீண்டும் இணையும் கமல் - வடிவேலு கூட்டணி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.