ETV Bharat / sitara

ஊர் திருவிழாவில் மக்களை மகிழ்வித்த வடிவேலு!

சிவகங்கை: கலியாந்தூர் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கலந்து கொண்டு குத்தாட்டம் போட்டதை கிராம மக்கள் வெகுவாக ரசித்தனர்.

வடிவேலு
author img

By

Published : Jul 4, 2019, 10:37 PM IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கலியாந்தூர் கிராமத்தில் அய்யனார் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த காலத்தில் புரவி எடுப்புத் திருவிழா நடத்தினால் மழை பெய்யும் என்பது ஐதீகம். மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்த திருவிழாவில் நகைச்சுவை புயல் வடிவேலு கலந்து கொண்டார். வடிவேலுவின் மனைவி சொந்த ஊர் கலியாந்தூர் என்பதால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்று இரவு நடைபெற்ற வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார்.

பாட்டு பாடி அசத்திய வடிவேலு

அப்போது, நடிகர் வடிவேலு, 'எட்டணா இருந்தா என்பாட்டை கேட்கும்' என்ற பாடலை பாடி அசத்தினார். நடித்தும் காட்டினார். பின்னர் அவர் பேசுகையில், "அய்யனாருக்கு அடிக்கடி திருவிழா நடத்தி மழையை வரவழைக்க வேண்டும். குடிநீர் பிரச்னை எல்லா இடங்களிலும் உள்ளது. அதனை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும். கிராமத்தின் பாரம்பரியமும், பண்பாடும் திருவிழாக்களில் தான் உள்ளது. அதில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். கலியாந்தூர் சுற்றுவட்டார கிராமங்களின் மருமகன் நான்" என்றார்.

Intro:சிவகங்கை

கோவில் விழாவில் பாட்டுப் பாடி அசத்திய வடிவேலு!

சிவகங்கை அருகே கோவில் விழாவில் கலந்துகொண்ட நகைச்சுவை நடிகர் வடிவேலு பாட்டு பாடி அசத்தினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கலியாந்தூர் அதிகமுடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு கலந்து கொண்டு குத்தாட்டம் போட்டதை கிராமமக்கள் வெகுவாக ரசித்தனர்.

Body:திருப்புவனம் அருகே உள்ள கலியாந்தூர் கிராம அய்யனார் கோயில் திருவிழா  நடைபெற்றது. திருப்புவனம் வேளார் தெருவில் இருந்து 5 புரவிகளை கிராமமக்கள் ஊர்வலமாக சுமந்து வந்து அய்யனார் கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்தினால் மழை பெய்யும் என்பது ஐதீகம். இந்த விழாவில் நகைச்சுவை புயல் வடிவேலு கலந்து கொண்டார். வடிவேலுவின் மனைவிக்கு கலியாந்தூர் சொந்த ஊர் என்பதால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசும் போது அய்யனாருக்கு அடிக்கடி திருவிழா நடத்தி மழையை வரவழைக்க வேண்டும், குடிநீர் பிரச்சனை எல்லா இடங்களிலும் உள்ளது. அதனை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும் கிராமத்தின் பாரம்பரியமும், பண்பாடும் திருவிழாக்களில் உள்ளது. அதில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். கலியாந்தூர் சுற்றுவட்டார கிராமங்களின் மருமகன் நான் என்றார். Conclusion:பின் கிராமமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க எட்டணா இருந்தா என்பாட்டை கேட்கும் என்ற பாடலை பாடி அசத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.