நடிகர் விமல், ஓவியா நடிப்பில் வரும் மே 4ஆம் தேதி வெளியாக இருந்த படம் 'களவாணி 2'. இப்படத்தை இயக்குநர் சற்குணம் இயக்கிருந்தார்.
இத்திரைப்படத்தை தமிழ்நாடு, புதுச்சேரியில் வெளியிடுவதற்கான உரிமையைப் பெற்ற ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ், அதனை மெரினா பிக்சர்ஸுக்கு வழங்க மூன்று கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் ஒப்பந்தத்தை மீறி படத்தின் உரிமையை கியூப் நிறுவனத்திற்கு மெரினா பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால், 'களவாணி 2' படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் சிங்கார வேலன் இடைக்காலத் தடை வாங்கி உள்ளார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து சிங்காரவேலன் கூறியதாவது, "விமல் தனது ஏ3வி சினிமாஸ் சார்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் சொந்தமாக தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா' என்கிற படத்திற்கு என்னிடம் மூன்று கோடி ரூபாய் பைனான்ஸ் பெற்றிருந்தார். ஆனால் அவரது அனுபவமின்மை காரணமாக நான் கொடுத்த மூன்று கோடியில் அவரால் படத்தை முடிக்க முடியவில்லை. இன்னும் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால்தான் இந்தப் படத்தை முடித்து வெளியிட முடியும்.
இந்நிலையில் இந்தப் படத்தின் உரிமை எங்களிடம்தான் இருக்கிறது. இயக்குநர் சற்குணம் இந்தப் படத்தை அவர் தயாரித்ததாக சொல்வது சுத்தமான பொய். என் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, ஆனால் என்னிடம் வாங்கியப் பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குநர் சற்குணமும் நடிகர் விமலும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய நாடகம் என்றுதான் நான் இதைக் கருதுகிறேன்". இவ்வாறு கூறியுள்ளார்.