'குலேபகாவலி' படத்தைத் தொடர்ந்து கல்யாண் இயக்கும் புதிய படம் கோஸ்டி. இந்த படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் கே.எஸ். ரவிக்குமார், சுப்பு பஞ்சு அருணாச்சலம், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, சத்யன், ஊர்வசி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், ஶ்ரீமன், மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், லிவிங்ஸ்டன், மதன்பாபு, சந்தான பாரதி, நரேன், தங்கதுரை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சுதன் சுந்தரம், ஜெயராம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் கல்யாண் கூறுகையில், "காஜல் அகர்வாலுடன் வேலை செய்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. அவரது உற்சாகமும் துறுதுறுப்பும் படப்பிடிப்பின் முதல் நாள் முதல் இறுதிநாள்வரை அப்படியே இருந்தது. காஜல் ஒரே டேக்கில் நடித்து முடித்துவிடும் திறமை கொண்டவர். ஆனால் அதை விடவும் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தன்னை தயார்படுத்திக்கொண்ட விதம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
-
Very happy to launch @MsKajalAggarwal ‘s #Ghosty first look.
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) April 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Best wishes to entire team.
Dir by #Kalyaan@iYogiBabu @SamCSmusic @seedpictures1 @Sudhans2017 @Jayaram_gj @thinkmusicindia @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/sxytKTCkp4
">Very happy to launch @MsKajalAggarwal ‘s #Ghosty first look.
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) April 14, 2021
Best wishes to entire team.
Dir by #Kalyaan@iYogiBabu @SamCSmusic @seedpictures1 @Sudhans2017 @Jayaram_gj @thinkmusicindia @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/sxytKTCkp4Very happy to launch @MsKajalAggarwal ‘s #Ghosty first look.
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) April 14, 2021
Best wishes to entire team.
Dir by #Kalyaan@iYogiBabu @SamCSmusic @seedpictures1 @Sudhans2017 @Jayaram_gj @thinkmusicindia @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/sxytKTCkp4
இக்கதை பல கிளை கதைகள், கதாப்பாத்திரங்களைக் கொண்டது. ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு கதாபாத்திரத்தை விலக்கினால் மொத்த கதையும் விழுந்துவிடும். கே.எஸ். ரவிக்குமார், சுப்பு பஞ்சு அருணாச்சலம், மொட்டை ராஜேந்திரன் என ஒவ்வொருவரும் இப்படத்தில் அருமையான பங்களிப்பை தந்துள்ளார்கள். 'கோஸ்டி' திரைப்படம் சென்னை, புதுச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் வெளியாகும் தேதி, இசை, ட்ரெய்லர் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜெயராம் ஆகியோர் கூறுகையில், "பல வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக மிளிரும் நடிகை காஜல் அகர்வால் எங்கள் படத்தில் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. இப்படத்தின் கதாபாத்திரத்திற்காக அவர் முழு உழைப்பை தந்திருக்கிறார். காவல் அலுவலராக கச்சிதமாக தன்னை அவர் பொருத்திக்கொண்டிருக்கிறார். அவரது கதாபாத்திரத்திற்கு இப்படத்தில் பல ஆக்சன் காட்சிகள் உண்டு. அதற்காக அவர் கடுமையாக பயிற்சி எடுத்து தன்னை தயார்படுத்தி கொண்டார். இப்படம் அவரது திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக, மிகப்பெரும் வெற்றிப்படமாக இருக்கும்" என்றனர்.