தமிழில் பரத் நடிப்பில் வெளியான 'பழனி' திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர், நடிகை காஜல் அகர்வால்.
அதன்பின், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகர்களின் படத்தில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருகிறார். இவர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தில் நடித்துவருகிறார்.
காஜல் அகர்வால் தற்போது மும்பை தொழிலதிபரான கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இவர்களது திருமணம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நட்சத்திர உணவக விடுதியில் நடைபெறாமல் காஜல் அகர்வால் வீட்டிலேயே நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அதன் பின்னர் மும்பையில் உள்ள நட்சத்திர உணவக விடுதியில் வைத்தே காஜல் அகர்வால் - கௌதம் கிச்லு திருமணம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
காஜல் அகர்வாலின் திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட காஜல்! - காஜல் அகர்வாலின் திருமண புகைப்படங்கள்
மும்பை: காஜல் அகர்வால் - கௌதம் கிச்லு திருமணம் நடைபெற்றுள்ளது.
![தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட காஜல்! காஜல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:56:34:1604150794-9377750-355-9377750-1604130753018.jpg?imwidth=3840)