ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடாரம் கொண்டான். இந்த படத்தை கமல் ஹாசனின், ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விக்ரம் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவருடன் அக்சரா ஹாசன், லீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
![கடாரம் கொண்டான்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3730663_kondan.jpg)
படம் வருகின்ற 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
விக்ரமின் சாமி 2, ஸ்கெட்ச் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பதால் கடாரம் கொண்டான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கமல் ஹாசனின் பிறந்தநாளன்று வெளியானதை தொடர்ந்து சிங்கிள் ட்ராக் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.