விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி (vijay sethupathi), நயன்தாரா (Nayantara) நடிப்பில் 'நானும் ரெளடிதான்' என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் மீண்டும் 'நானும் ரெளடிதான்' (naanum rowdy dhaan) பட கூட்டணியான விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். லலித்குமார், விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது இறுதிக்கட்ட பணியில் படக்குழுவினர் இருக்கின்றனர். இன்று (நவம்பர் 15) 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திலிருந்து விஜய் சேதுபதியின் கதாபாத்திரமான 'ராம்போ' போஸ்டரும் சமந்தாவின் கதாபாத்திரமான 'கதீஜா' போஸ்டர் என இரண்டு போஸ்டர்கள் வெளியாகின.
-
Introducing Namma Kanmani!!
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) November 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The charming and sweeter than sugar Kanmani is all love and love only ☺️
The Third First Look Poster of none other than Lady Superstar #Nayanthara @VigneshShivN @VijaySethuOffl @anirudhofficial @Samanthaprabhu2 @7screenstudio @SonyMusicSouth pic.twitter.com/JWydeYFqrQ
">Introducing Namma Kanmani!!
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) November 15, 2021
The charming and sweeter than sugar Kanmani is all love and love only ☺️
The Third First Look Poster of none other than Lady Superstar #Nayanthara @VigneshShivN @VijaySethuOffl @anirudhofficial @Samanthaprabhu2 @7screenstudio @SonyMusicSouth pic.twitter.com/JWydeYFqrQIntroducing Namma Kanmani!!
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) November 15, 2021
The charming and sweeter than sugar Kanmani is all love and love only ☺️
The Third First Look Poster of none other than Lady Superstar #Nayanthara @VigneshShivN @VijaySethuOffl @anirudhofficial @Samanthaprabhu2 @7screenstudio @SonyMusicSouth pic.twitter.com/JWydeYFqrQ
இந்நிலையில் தற்போது நயன்தாராவின் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாரா கண்மணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
கடந்த சில நாள்களாக 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் எனப் பரவி வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. காரணம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் டிசம்பர் மாதம் திரையரங்கில் வெளியாகும் என படக்குழு இன்று வெளியிட்ட போஸ்டர்களில் குறிப்பிட்டுள்ளனர்.