ETV Bharat / sitara

கவனத்தை ஈர்க்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப் போஸ்டர்கள்! - காத்துவாக்குல ரெண்டு காதல் வெளியாகும் தேதி

விஜய் சேதுபதி (vijay sethupathi), சமந்தா (Samantha) நடிப்பில் உருவாகும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' (Kaathu Vaakula Rendu Kaadhal) படத்தின் போஸ்டர்கள் இன்று (நவம்பர் 15) வெளியாகின.

KRKL
KRKL
author img

By

Published : Nov 15, 2021, 3:51 PM IST

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி (vijay sethupathi), நயன்தாரா (Nayantara) நடிப்பில் 'நானும் ரெளடிதான்' என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் மீண்டும் 'நானும் ரெளடிதான்' (naanum rowdy dhaan) பட கூட்டணியான விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். லலித்குமார், விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது இறுதிக்கட்ட பணியில் படக்குழுவினர் இருக்கின்றனர். 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் முதல் பாடலான 'ரெண்டு காதல்' காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது.

இரண்டாவது பாடலான "டூ...டூ...டூ" சமீபத்தில் வெளியானது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாது பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, கத்ரீனா ஃகைப் ஆகியோருக்கும் இப்பாடல் விருப்ப பாடலானது.

இந்நிலையில், இன்று (நவம்பர் 15) 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திலிருந்து விஜய் சேதுபதியின் கதாபாத்திரமான 'ராம்போ' போஸ்டரும் சமந்தாவின் கதாபாத்திரமான 'கதீஜா' போஸ்டர் என இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்டர்கள் தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: நயன்தாரா, சமந்தாவுடன் காதல் செய்யும் விஜய் சேதுபதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.