ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகும் படம் காலங்களில் அவள் வசந்தம். சி.வி. குமார் தயாரிக்கும் இப்படத்தில் மாடல் கௌசிக் ராம் நாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக நெடுநல்வாடை படத்தில் நடித்த அஞ்சலி நாயர் நடிக்கிறார். காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 3) சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
ஒரு இளம் ஜோடிக்கு இடையேயான திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையை ஆராயும் காதல் படமாக இது உருவாகிவருவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'வாத்தி' கம்மிங்... தனுஷின் புதிய அவதாரம் தொடக்கம்