நடிகை ஜோதிகா 2015ஆம் ஆண்டு வெளியான '36 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதனையடுத்து அவர் பெண்களை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில், 'மகளிர் மட்டும்', 'நாச்சியார்', 'ராட்சசி', 'காற்றின் மொழி', 'ஜாக்பாட்', 'தம்பி', 'பொன்மகள் வந்தாள்', 'உடன்பிறப்பே' உள்ளிட்டப் பல படங்களில் ஜோதிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ராதா மோகன் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான காற்றின் மொழி திரைப்படம் ஜோதிகாவுக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. பாலிவுட்டில் வித்யா பாலன் நடிப்பில் வெளியான 'தும்கரி சுலு' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாக்கப்பட்டது.
-
துபாய் எக்ஸ்போவில் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் திரை விழாவில்#காற்றின்மொழி திரைப்படம் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி 🙏🏆😇#dubaiexpo2021 #FICCI FLO company @SubhashGhai1 #Jyotika mam@Radhamohan_Dir @johnsoncinepro pic.twitter.com/H6mi4f8DXS
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) November 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">துபாய் எக்ஸ்போவில் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் திரை விழாவில்#காற்றின்மொழி திரைப்படம் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி 🙏🏆😇#dubaiexpo2021 #FICCI FLO company @SubhashGhai1 #Jyotika mam@Radhamohan_Dir @johnsoncinepro pic.twitter.com/H6mi4f8DXS
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) November 7, 2021துபாய் எக்ஸ்போவில் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் திரை விழாவில்#காற்றின்மொழி திரைப்படம் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி 🙏🏆😇#dubaiexpo2021 #FICCI FLO company @SubhashGhai1 #Jyotika mam@Radhamohan_Dir @johnsoncinepro pic.twitter.com/H6mi4f8DXS
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) November 7, 2021
நடுத்தர குடும்பப் பெண்ணாக வரும் விஜயலட்சுமி (ஜோதிகா) பின் ஒரு சந்தர்ப்பத்தில் வானெலியில் ஆர்.ஜே.வாக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பின் விஜயலட்சுமி சந்திக்கும் பிரச்னைகள் சவாலை, நகைச்சுவையாக இப்படத்தில் காண்பிக்கபடும்.
ரசிகர்கள் மத்தியில் ஜோதிகா இப்படத்தில் தனது தனித்துவமான நடிப்பால் பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது நடைபெற்று வரும் துபாய் எக்ஸ்போவில் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படத் திரை விழாவில், 'காற்றின் மொழி' திரைப்படம் திரையிடலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாரதியார் கூறியதைத்தான் ஜோதிகா கூறியுள்ளார்- மேலோங்கும் ஆதரவுக் குரல்கள்!