ETV Bharat / sitara

அனிருத் வெளியிட்ட 'ஜோஸ்வா இமை போல் காக்க' டீஸர்! - அனிருத் வெளியிட்ட ஜோஸ்வா இமை போல் காக்க டீஸர்

கௌதம் வாசுதேவ் மேனனின் அடுத்தப் படமான 'ஜோஸ்வா இமை போல் காக்க' திரைப்படத்தின் டீஸர் வெளியானது. இதனை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

joshua imai pol kakka teaser released by anirudh
ஜோஸ்வா இமை போல் காக்க
author img

By

Published : Nov 29, 2019, 10:33 AM IST

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அவரது அடுத்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படமான 'ஜோஸ்வா இமை போல் காக்க' திரைப்படத்தின் டீஸர் வெளியானது.

படத்தின் டீஸரை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஆக்சன், சேஸிங், ஸ்டென்ட் என வழக்கமான பாணியில், அதே நேரம் விறுவிறுப்பான கௌதம் மேனனின் ஸ்டைலில் படத்தின் டீஸர் ஒரு நிமிடம் கடந்து செல்கிறது.

படத்தில் கதாநாயகியாக வரும் குந்தவி சிதம்பரத்தைக் கொல்வதற்கு, 2 மில்லியன் டாலர் கொடுக்கப்படும் என அமெரிக்காவில் இருந்து வரும் தகவலையடுத்து, ஒரு கும்பல் கிளம்புகிறது. கதாநாயகியைக் கொல்ல வரும் கும்பலிடமிருந்து அவரைக் காக்க வருகிறார் கதாநாயகன் ஜோஸ்வா.

இதைத்தொடர்ந்து படத்தின் டீஸரில் ஆக்சன் காட்சிகள் இடம்பெறுகின்றன. டீஸர் வெளியானதைத் தொடர்ந்து பல கலவையான விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்து வருகின்றன.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: இருட்டு படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.