ETV Bharat / sitara

ரசிகர்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய வகீன் ஃபீனிக்ஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் வகீன் ஃபீனிக்ஸ் தனது ஜோக்கர் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் பல்வேறு திரையரங்குகளுக்குச் சென்று தன் ரசிகர்களை சந்தித்து உற்சாகப் படுத்தினார்.

author img

By

Published : Oct 7, 2019, 9:40 PM IST

joaquin-phoenix as Joker

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஹாலிவுட் திரைப்படம் ’ஜோக்கர்’. இதில் கதாநாயகனாக நடித்த வகீன் ஃபீனிக்ஸ் - Joaquin Phoenix லாஸ் ஏஞ்சல்ஸில் தன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் பல்வேறு திரையரங்குகளுக்குச் சென்றுத் தன் ரசிகர்களைச் சந்தித்தார்.

படம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்போதே திரையரங்கின் மத்தியில் வகீன் ஃபீனிக்ஸ் தோன்றியது பார்வையாளர்களையும், அவரது ரசிகர்களையும் பெரும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியது.

நகரம் ஏற்படுத்தும் தனிமையுணர்வு, கதாநாயகனின் எதிர்மறை எண்ணங்கள், மனச்சிதைவு உள்ளிட்டவற்றை பேசுபொருளாகக்கொண்டு வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம், அமெரிக்காவில் R சான்றிதழுடன் வெளியாகியுள்ளபோதும், பெரும் பாராட்டுக்களையும், நேர்மறையான விமர்சனங்களையும் குவித்து வருகிறது.

மேலும் வில்லன் பாத்திரத்தைக் கதாநாயகனாகக் கொண்டு வெளிவந்துள்ள DC காமிக்ஸின் இந்தத் திரைப்படம், சினிமா ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

"ஆர்தர் ஃப்ளெக் ஜோக்கரான கதை" - மனம் திறந்த இயக்குநர் டோட் பிலிப்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.