ETV Bharat / sitara

திருமணத்துக்குப் பிறகு கம்பேக் தரும் ஜெனிஃபர் லாரன்ஸ் - ஜெனிஃபர் லாரன்ஸ் புதிய படம்

சூப்பர்ஹீரோ படமான 'டார்க் பீனிக்ஸ்' படத்துக்குப் பிறகு, காமெடி படம் மூலம் நடிப்பு பக்கம் மீண்டும் திரும்புகிறார் ஜெனிஃபர் லாரன்ஸ்.

Jennifer Lawrence returns to acting after marriage
Actress Jennifer Lawrence
author img

By

Published : Feb 21, 2020, 9:31 AM IST

லாஸ் ஏஞ்சலிஸ்: நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கும் காமெடி திரைப்படம் மூலம் கம்பேக் தருகிறார் ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ்.

கடந்த ஆண்டு கூக் மரோனி என்ற ஆர்ட் கேலரி இயக்குநரை திருமணம் செய்துகொண்டார் ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ். திருமணத்துக்குப் பிறகு புதிய படங்களில் கமிட்டாகாத நிலையில், நடிப்பை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார்.

இதையடுத்து தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கும் காமெடி திரைப்படம் மூலம் கம்பேக் தரவுள்ளார். 'டோன்ட் லுக் அப்' என்ற பெயரில் உருவாகும் படத்தில் பிரதான கேரக்டரில் நடிக்கிறார். படத்தை ஆடம் மெக்கே இயக்குகிறார்.

அடுத்த ஆறு மாத காலத்தில் பூமியை நோக்கி விண்கள் ஒன்று தாக்க வருவதை கண்டறியும் இரு விஞ்ஞானிகள், அது பற்றி உலக மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதை, காமெடி கலந்த கதையம்சத்துடன் சொல்கிறது இந்தப் படம். படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது.

கடந்த ஆண்டு ஜெனிஃபர் லாரன்ஸ் நடிப்பில் 'டார்க் பீனிக்ஸ்' என்ற சூப்பர் ஹீரோ படம் ஜூன் மாதம் வெளியானது. இதைத்தொடர்ந்து நடிப்புக்கு முழுக்கு போட்ட அவர், அக்டோபர் மாதம் கூக் மரோனியை வாழ்க்கை துணையாக கரம் பிடித்தார். இவர்களுக்கு பிப்ரவரி மாதமே நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.

திருமணத்துக்குப் பின்பு ஜெனிஃபரின் கம்பேக் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஜெனிஃபர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எக்ஸ் மேன் சீரிஸ், தி ஹங்கர் கேம்ஸ் சீரிஸ் படங்கள் மூலம் உலக அளவில் புகழ் பெற்ற ஜெனிஃபர் லாரன்ஸுக்கு இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2017இல் இவரது நடிப்பில் வெளியான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான 'மதர்' ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

இதையும் படிங்க: மிரட்டும் டேனியல் கிரெய்க் - நோ டைம் டூ டை படத்தின் டீசர் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.