'திரிஷ்யம்' படத்தின் இயக்குநர் ஜீது ஜோசப், பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் 'த பாடி'. இம்ரான் ஹாஷ்மி, சோபிதா துலிபாலா, வேதிகா, ரிஷி கபூர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படம் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லராக அவதரிக்கப்போகிறது. பார்ப்போரை இருக்கையின் நுனியிலேயே போய் உட்கார வைக்கும் வண்ணம் படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது.
மார்சுரியில் இருந்து காணாமல் போகிறது சோபிதா துலிபாலாவின் சடலம், அந்த சடலத்தை தேடும் காவல் துறை அதிகாரியான ரிஷி கபூர், அதைத் தொடர்ந்து நடந்தேரும் சம்பவங்கள் என படத்தின் ட்ரெய்லரிலேயே அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர் ஜீது ஜோசப்.
இப்படத்தை சுனீர் கெதர்பால், வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் இணைந்து தயாரித்திருக்கிறார். வருகிற டிசம்பர் மாதம் 13ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: 'தம்பி' கார்த்தி பட போஸ்டரை வெளியிட்ட அண்ணன் சூர்யா!