ETV Bharat / sitara

மகனுடன் மீண்டும் இணையும் ஜெயம் ரவி - பொன்னியின் செல்வன் அப்டேட்ஸ்! - பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி தற்போது இணைந்துள்ளார்.

Jayam Ravi, Aarav Ravi joining together again in Ponniyin Selvan
author img

By

Published : Nov 6, 2019, 2:18 PM IST

புத்தக வாசிப்பாளர்கள், திரைத் துறையினர் தொடங்கி பெரும்பாலான தமிழ் மக்களால் பல ஆண்டுகளாக திரைப்பட வடிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுவந்த ’பொன்னியின் செல்வன்’ புதினத்தை படமாக மணிரத்னம் இயக்கவுள்ள நிலையில், படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது தீவிரமாக்கப்பட்டு, படப்பிடிப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

தன் கனவுப்படமான இந்தப் படத்திற்காக வழக்கம்போல் தன் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் மணிரத்னம் கைகோர்த்துள்ளார். அமிதாப் பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் பச்சன், அமலா பால், பார்த்திபன், ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இத்திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவியும் தற்போது இப்படக்குழுவில் இணைந்துள்ளார்.

Jayam Ravi with his son Aarav Ravi
Jayam Ravi with his son Aarav Ravi

சென்ற வருடம் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படமான ’டிக் டிக் டிக்’கில் தன் தந்தையுடன் அறிமுகமான ஆரவ் ரவி, தற்போது மீண்டும் பொன்னியின் செல்வனில் தன் தந்தையுடன் இணைந்து நடிக்கவுள்ளது சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதையின் மையக் கதாபாத்திரங்களுள் ஒன்றான வந்தியத்தேவன் ரோலில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், அவரது மகன் ஆரவ் ரவிக்கு வழங்கப்பட்டுள்ள கதாபாத்திரம் குறித்தும் பிற நடிகர், நடிகையரின் கதாபாத்திரங்கள் குறித்தும் விரைவில் அறிவிப்பு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:

ஆயுத எழுத்து முதல் பொன்னியின் செல்வன் வரை - மணிரத்னம் படத்தில் அஷ்வின்

Intro:Body:

Mani Ratnam's 'Ponniyin Selvan' is one of the grandest mounted film projects in Tamil cinema which is in rigorous pre-production mode and will go on floors in a few weeks time.  The A.R.Rahman musical has the ensemble cast of Amitabh Bachchan, Vikram, Karthi, Jayam Ravi, Keerthy Suresh, Aishwarya Rai Bachchan, Amala Paul, Parthiban and Jayaram have been signed so far with more to go.

The latest addition to the 'Ponniyin Selvan' cast is Arav Ravi the son of Jayam Ravi who made his acting debut in father's super hit film 'Tik Tik Tik' touted as India's first space movie.  The father-son duo are going to share screen space for the second time and while it is already reported that Jayam Ravi will be portraying the central character of Vandhiyathevan it is unknown which role little Arav will don.  All official announcements regarding this mega project is expected pretty soon.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.