இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கத்தில், தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'தும்பா'. இப்படத்தில் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விலங்குகளையும், மனிதர்களையும் மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் குழந்தைகளை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் சுரேகா கூறியதாவது, நடிகர் 'ஜெயம் ரவி' ஒரு சிறப்பு தோற்றத்தில் வருகிறார். ஒவ்வொரு படத்திலும் அவருடைய நட்சத்திர அந்தஸ்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தாலும், இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளித்துள்ளது.
அவரது கதாபாத்திரத்தை சர்ப்ரைஸாக வைத்திருக்கிறோம். அது ஒரு சிறப்புத் தோற்றம்தான் என்றாலும் பார்வையாளர்களை அதிகம் கவரும் என நம்புகிறோம். குழந்தைகள், குடும்பத்தார்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
ஜூன் 21ஆம் தேதி படம் வெளியாகிறது. மேலும் இந்தப் படத்தில் 'அனிருத்', 'சிவகார்த்திகேயன்' வரை பிரபலங்களின் குரல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 'தும்பா'வின் உலகத்திற்கு கூடுதல் அழகு சேர்த்திருக்கின்றன. அனிருத் ஒரு பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார் என்று தெரிவித்தார்.