ETV Bharat / sitara

போதைப்பொருட்களால் இளைஞர்கள் இறக்கின்றனர் - ஜாக்குவார் தங்கம்

சென்னை: போதைப் பொருட்களால் வாழ வேண்டிய இளைஞர்கள் உயிரிழக்கின்றனர் என ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Aug 24, 2019, 8:01 PM IST

Jaguar Thangam

முன்னாள் காவல் துறை அலுவலர் மோத்தி முகமது புது முகங்களை வைத்து இயக்கி உள்ள படம் கோலா. காவல் துறை அலுவலராக மோத்தி பணியற்றியபோது அவர் சந்தித்த உண்மை சம்பவங்களையும், கஞ்சா பயன்பாட்டால் இளைய தலைமுறையினர் எந்த அளவிற்கு சீரழிகின்றனர் என்பதை படமாக்கி உள்ளார்.

இப்படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ஜாக்குவார் தங்கம், ”கஞ்சாவை ஒழிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படத்திற்கு முதலில் எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி நரம்புத் தளர்ச்சியால் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் .

கோலா இசை வெளியிட்டு விழாவில் பேசிய ஜாகுவார் தங்கம்

வாழ வேண்டிய வயதில் இப்போது இறக்கின்றனர். இது இளைஞர் சமூகத்திற்கு பெரும் அவலத்தை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா பயன்படுத்தும் போது மனதில் என்ன உள்ளதோ அதை அப்படியே செய்துவிடுகின்றனர். கொலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதை அப்படியே செய்து விடுகின்றனர்.

ஒரு சிலர் சம்பாதிப்பதற்காக பல கோடி மக்களின் வாழ்கையை சீரழிக்கின்றனர். இது போன்ற ஆபத்தான பொருட்களை விற்பவர்கள் மீது அரபு நாடுகளில் வழங்கப்படுவது போல் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். இல்லையென்றால் இது பேன்ற குற்றவாளிகளை சட்டப்படி தண்டிப்பதைவிட மக்களே தண்டிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும்” என்றார்.

Intro:போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மக்களே தண்டனை கொடுக்கும் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் ஜாகுவார் தங்கம் பேச்சு
Body:ஆர்ட்ஸ் தயாரிப்பில் புதுமுகங்கள் நடித்துள்ள படம் கோலா இந்தப்படத்தை திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார் முன்னாள் போலீஸ் அதிகாரியான மோத்தி முகமது. இவர் பணியில் இருக்கும் போது நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கஞ்சா பயன்பாட்டால் இளையதலைமுறையினர் எந்த அளவிற்கு சீரழிக்கப் படுகின்றனர் என்பதை குறும்படமாக மோதியை இயக்கியுள்ளார் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பாக்யராஜ் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர் இந்த விழாவில் பேசிய ஜாகுவார் தங்கம்

கஞ்சா ஒழிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படத்திற்கு முதலில் எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன் ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி நரம்புத் தளர்ச்சியால் கல்லீரல் உடல் பாதிக்கப் பட்டு இருக்கின்றனர் இப்போது வயதில் சாக வேண்டியவர்கள் 30 வயதில் சாகும் அவலம் ஏற்பட்டுள்ளது எப்படி ஒழிப்பது என்று தெரியவில்லை கஞ்சா பயன்படுத்தினால் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை தான் செய்வார்களா கொலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் செய்துவிடுவார்கள் அத்தகைய ஆபத்தான பொருளை நாட்டில் விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள் ஒருசிலர் சம்பாதிப்பதற்காக பலகோடி மக்களை சீரழிகின்றனர் இவர்கள் அரபு நாடுகளில் செய்வது போன்று தண்டனை வழங்க வேண்டும் அப்படி இல்லை என்றால் இதுபோன்ற குற்றவாளிகளை சட்டம் தண்டிப்பதை விட மக்களே தண்டிக்க வேண்டும் என்ற சட்டம் வரவேண்டும் Conclusion:அப்படி வந்தால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.