ETV Bharat / sitara

’நமக்கு கோல்டன் டைம் கிடைத்துள்ளது’ - ஜாகுவார் தங்கம் - ஜாகுவார் தங்கம் பேட்டி

கரோனா வைரஸ் தொற்றால் நமக்கு கிடைத்த இந்த விடுமுறையை நாம் அனைவரும் எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஜாகுவார் தங்கம் நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

ஜாகுவார் தங்கம்
ஜாகுவார் தங்கம்
author img

By

Published : Apr 12, 2020, 10:06 PM IST

கரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்த நீண்ட விடுப்பை எப்படி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜாகுவார் தங்கம் நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியிதாவது, “எனக்கு தற்போது 68 வயதாகிறது, நான் எப்போதும் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவேன். இப்போது நாம் வாழ்க்கையில் நினைத்துக் கூட பார்க்க முடியாத விடுமுறையில் உள்ளோம். இதை பயனுள்ள வகையில் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கொள்வேன். யோகாசனம், தியானம் செய்வேன்.

அதற்குப் பிறகு எனக்கு பிடித்த புத்தகங்களை படிப்பேன். கராத்தே பயிற்சி செய்வேன். தொடர்ந்து வைரஸ்களை ஒழிக்கும் வகையில் மஞ்சள், வேப்பிலை கலந்த நீரில் நன்றாக குளிப்பேன். பிறகு காலை உணவை இஞ்சி, வெங்காயம் போன்ற மருத்துவ குணம் கொண்ட பொருள்களை பயன்படுத்தி செய்த சட்னியுடன் உட்கொள்வேன். வாரத்தில் ஒருநாள் நெல்லிக்காய், பப்பாளி இலையின் சாரை குடிப்பேன். அது நம் உடம்பிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

ஜாகுவார் தங்கம்

முன்பெல்லாம் எனக்கு கதை எழுதுவதற்கு நேரம் இருக்காது. ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவால் கிடைத்த இந்த பொன்னான நேரத்தை கதை எழுதுவதற்கு பயன்படுத்துகிறேன். பின் மதிய உணவு முடிந்ததும், எனது மகனுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளைக் கற்றுத் தருவேன். வாழ்க்கையில் மீண்டும் கிடைக்காத இந்த பொன்னான விடுமுறையை இதுபோன்ற பயனுள்ளதாக நான் பயன்படுத்திக் கொள்வதால், என் மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த விடுமுறையை உணர்ந்து வீட்டிற்குள்ளேயே என்ஜாய் செய்யுங்கள். இப்போது நமக்கு கிடைத்திருக்கும் விடுமுறை என்பது கோல்டன் டேஸ். இது மீண்டும் நமது வாழ்க்கையில் கிடைக்காது. ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருங்கள். காவல்துறையினர் நமக்காக இரவும், பகலுமாக பணியாற்றுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மேடையில் படத்தின் தலைப்பை மறந்த ஜாக்குவார் தங்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.