ETV Bharat / sitara

ஜாக்குவார் தங்கத்திற்கு கொலை மிரட்டல்!

தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் மூவரை கைது செய்ய வேண்டும் என தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

ஜாக்குவார் தங்கம்
ஜாக்குவார் தங்கம்
author img

By

Published : Aug 13, 2021, 8:53 PM IST

Updated : Aug 15, 2021, 11:46 AM IST

சென்னை: தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் தனக்கு கொலை மிரட்டல் விடும் மூவரை கைது செய்யக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் இன்று (ஆக. 13) புகார் மனு ஒன்றை அளித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர்.
இந்தச் சங்கத்தில் துரைசாமி, விஜயராகவா சக்கரவர்த்தி, சேகர் என்பவர்கள் கடந்த 2012ஆம் ஆண்டு உறுப்பினராக சேர்ந்தனர். அதன் பின்னர், துரைசாமி சங்கத்தின் செயலாளராக செயல்பட்டு வந்தார்.

விதிகளை மீறி...

இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து சங்க உறுப்பினர்களிடமும், பிற நபர்களிடமும் பல திரைப்படங்களை விற்பனை செய்து தருவதாகவும், திரைப்படத்தை பிறமொழிகளில் விற்பனை செய்து தருவதாகவும், திரைப்படத் தலைப்பை மற்ற தயாரிப்பாளரிடமிருந்து பெற்று தருவதாகவும் கூறி சங்கத்தின் விதிகளுக்கு முரணாக செயல்பட்டுவந்தனர்.

மோசடியால் நீக்கம்

மேலும், இந்த மூன்று பேரும் சேர்ந்து சங்க உறுப்பினர்களிடம் எனது பெயரைக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அச்சாரம் என்ற பத்திரிகை நடத்துவதாக கூறி பல நபர்களிடம் ரூ.5 ஆயிரம் வீதம் பெற்றுக்கொண்டு அடையாள அட்டை வழங்கி மோசடி செய்துள்ளனர்.

ஜாக்குவார் தங்கம் செய்தியாளர் சந்திப்பு

இதானால், மூன்று பேரும் சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கொலை மிரட்டல்

மேலும், இவர்கள் 'கில்ட்' சங்கத்தின் சின்னத்தை பயன்படுத்தி முகநூலிலும், வாட்ஸ்-அப் செயலியிலும் குழுக்களைத் தொடங்கி அதன்மூலம் என்னைப் பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர்.

மேலும், செல்போனில் என்னை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை செய்து விடுவதாக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.

எனவே எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்த மூவரையும் காவல் ஆணையர் கைது செய்து, சங்க நிர்வாகிகளிடம் ஏமாற்றி பெற்ற பணத்தையும் மீட்டு தரும்படி புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 100 மில்லியனைக் கடந்து அடிச்சி தூக்கிய தல அஜித் பாடல்..!

Last Updated : Aug 15, 2021, 11:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.