தல அஜித்தின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலும் நீண்ட மாதங்களாக இதற்காகக் காத்திருந்த அஜித் ரசிகர்கள் அப்டேட்டுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே பேனர், போஸ்டர் எனக் கொண்டாட ஆரம்பித்தனர்.
வலிமை ரிலீஸ் தேதி
இந்நிலையில், 'வலிமை' திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையன்று (நவம்பர் 4) ரிலீசாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் படக்குழு இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாததால் அஜித் ரசிகர்கள் சற்று குழப்பமாகவே உள்ளனர்.
தீபாவளி ரேஸ்
தீபாவளி பண்டிகையன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2019ஆம் ஆண்டு ரஜினியின் 'பேட்ட' திரைப்படமும், அஜித்தின் 'விஸ்வாசம்' படமும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தன.
இதையும் படிங்க: ’உறியடி’ விஜய் குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!