ETV Bharat / sitara

இருளர் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் 'இருளி'

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீமைத் தொடர்ந்து, முழுவதும் இருளர் வாழ்வியல் பின்னணியில் உருவாக்கப்படவுள்ள 'இருளி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றைய தினம் தொடங்கியது.

இருளர் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் 'இருளி'
இருளர் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் 'இருளி'
author img

By

Published : Feb 18, 2022, 5:18 PM IST

சூர்யா நடிப்பில் வெளியாகி, ஆஸ்கர் விருதுப் பட்டியலில் தேர்வாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் 'ஜெய்பீம்'. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இருளர் இன மக்களின் வாழ்வியலின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்நிலையில் தற்போது முழுவதும் இருளர் வாழ்வியல் பின்னணியில், 'இருளி' என்னும் திரைப்படம் உருவாகிறது. இருளர்கள் வாழ்வியலை மையப்படுத்தி, ஒரு அருமையான காதல் திரைப்படமாக உருவாகிறது 'இருளி'. முரளிதரன் கதையில், மதன் கேப்ரியல் இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

பிப்ரவரி 17ஆம் தேதி மாமல்லபுரம் கடற்கரையில் முதல்கட்ட படப்பிடிப்பு கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

செந்தில் கணேஷ் (ராஜலஷ்மி), டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசை, நடனம் ஒன்றாகக் கலந்த இருளர்களின் வாழ்வியலை, இதுவரை திரைத் துறை கண்டிராத வகையில் காட்டப்படவுள்ளது.

இதையும் படிங்க: மங்கையரின் மனம் மயக்கும் மகத்தின் கிளிக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.