லன்ச் பாக்ஸ், பி கே, சமீபத்தில் வெளிவந்த அங்க்ரேஸி மீடியம் உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் இர்ஃபான் கான். தன் தனித்துவமான நடிப்பால் பாலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர்.
சமீபத்தில் ஜெய்ப்பூரில் வசித்து வந்த இர்ஃபானின் தாய் உடல்நிலை குன்றி உயிரிழந்த நிலையில், மும்பையில் வசித்து வரும் இர்ஃபான் கான் ஊரடங்கு காரணமாக நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் அவருடைய அன்னைக்கு இர்ஃபான் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் தற்போது இர்ஃபானின் உடல் மீண்டும் மோசமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இர்ஃபான் கானுக்கு நியூரோஎண்டோக்ரைன் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, மனைவி, இரு மகன்கள் உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகருக்கு நேர்ந்த சோகம்; வீடியோ கான்ஃபரன்சிங்கில் அன்னைக்கு இறுதி அஞ்சலி