ETV Bharat / sitara

குண்டு படத்தின் அதிரடியான அடுத்த அப்டேட்! - இயக்குநர் பா.ரஞ்சித்

அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தில் நிலமெல்லாம் என்ற முதல் சிங்கிள் ட்ராக் நாளை வெளியாகிறது.

attakathi dinesh
author img

By

Published : Sep 22, 2019, 12:17 PM IST

'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்திருக்கும் திரைப்படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, அனேகா, ரித்விகா லிஜீஸ், முனீஸ்காந்த், ரமேஸ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் தென்மா, இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

நிலமெல்லாம் சிங்கிள் டிராக் பதிவு
நிலமெல்லாம் சிங்கிள் ட்ராக் பதிவு

'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் வெளியானதிலிருந்து படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தில் பேசப்படும் அரசியல் மக்களிடையே ஒரு சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு லாரி ஓட்டுநரின் வாழ்க்கை, இரும்புக் கடையில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வியலை தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் படம்பிடித்துக் காண்பித்ததில்லை.

அவர்களது வாழ்க்கையில் இருக்கும் கொண்டாட்டம், யதார்த்தமான பேச்சு என அனைத்திலும் இப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் இடம்பெறும் நிலமெல்லாம் என்ற சிங்கிள் ட்ராக் நாளை வெளியாகும் என தெரிவித்துள்ளது.

Intro:Body:

Irandam Ulagaporin Kadaisi Gundu first single track release

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.