ETV Bharat / sitara

’இதைப் பார்த்தால் கண்கள் கூசாதா’ - பாரதிராஜாவுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர்!

‘இரண்டாம் குத்து’ படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை குறித்து படத்தின் இயக்குநர் பதிலடி கொடுக்கும் விதத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாரதிராஜா
பாரதிராஜா
author img

By

Published : Oct 8, 2020, 2:04 PM IST

இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இரண்டாம் குத்து’. அடல்ட், த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இதில் அக்ரிதி சிங், டேனியல், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டரும் டீஸரும் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “இரண்டாம் குத்து படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசிகிறது. இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்?

எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பிவைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்கவைக்கிறது. நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலை கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தர்.

இயக்குநர் வெளியிட்ட சந்தோஷ் ஜெயகுமார்
இயக்குநர் வெளியிட்ட சந்தோஷ் ஜெயகுமார்

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார் ’டிக்டிக்டிக்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “டிக்டிக்டிக் படத்தை பார்த்தால் கூசாத கண்கள், இப்போ மட்டும் கூசிவிட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 1981ஆம் ஆண்டு, பாரதிராஜா இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ’டிக்டிக்டிக்’ படத்தின் போஸ்டரில் நடிகைகள் டூ-பீஸ் உடையணிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்! - பாரதிராஜா வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.