ETV Bharat / sitara

நயன்தாராவிற்கு பிரத்யேகமாக எழுதப்பட்ட 'பவானி கீதம்'

'ஐரா' படத்தின் 'பவானி கீதம்' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ira
author img

By

Published : Feb 8, 2019, 11:33 AM IST

நடிகை நயன்தாரா முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடித்து வெளிவர இருக்கும் படம் 'ஐரா'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது.

ஏற்கனவே இப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது. இந்நிலையில் 'பவானி கீதம்' என்று அழைக்கப்படும் 'மேகதூதம்' சிங்கிள் பாடல் இசை அனைத்து தரப்பினர் இடையே வரவேற்பு பெற்றுள்ளது.

இப்பாடல் பற்றி இயக்குனர் கே எம் சர்ஜூன் கூறியதாவது, 'பவானி' என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் இப்பாடல். அவளுடைய கனவுகள், தனக்கு பிடித்த ஆன்மாவுடனான மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்காக ஏங்குவது போன்றவற்றை வெளிப்படுத்தும் பாடல்.

இந்த அழகான பாடலை கொடுத்த தாமரை எப்பொழுதும் உணர்ச்சிகளின் அமுதம், அவரின் பாடல் வரிகள் மூலம் நிபந்தனையற்ற அன்பின் மேன்மையை உயர்த்தியுள்ளார்.

காட்சிகளும், பாடலின் சூழ்நிலையும் மற்றும் நயன்தாராவின் பிரம்மாண்டமான திரை ஆளுமையும் பாடலுக்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என நம்புகிறேன் என்றார்.

தொடர்ந்து நயன்தாராவின் நடிப்பைப் பற்றி அவர் கூறியதாவது, இது அவரது 63ஆவது திரைப்படமாகும். படத்தை இயக்கும்போது அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

இந்த படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில் பார்கலாம், குறிப்பாக 'பவானியின்' கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

நடிகை நயன்தாராவிற்கு என்று பிரத்தியோகமாக எழுதப்பட்ட "பவானி கீதம்"

ஒவ்வொரு படத்திலும், நயன்தாராவின் நடிப்பிற்கு வரவேற்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவர் நடிப்பில் அடுத்து வரும் படமான 'ஐரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் மூலம் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது.  நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் முதன்முதலாக நடிக்கும் இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. " பவானி கீதம் " என்று அழைக்கப்படும் 'மேகதூதம்' சிங்கிள் பாடல்  இசை அனைத்து தரப்பினர் இடையே வரவேற்பு பெற்றுள்ளதால்.  ஒட்டுமொத்த ஐரா குழுவும்  உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்த பாடல் ஏன் 'பவானியின் கீதம்' என்று கூறப்படுகிறது என்பதை இயக்குனர் கே எம் சர்ஜூன் கூறும்போது இந்தப் பாடலை  ஏற்கனவே கேட்டவர்கள் எளிதாக இதை கண்டுபிடித்திருப்பார்கள் என நம்புகிறேன். 'பவானி' என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் பாடல். அவளுடைய கனவுகள், அபிலாஷைகள், தனக்கு பிடித்த ஆன்மாவுடனான மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்காக ஏங்குவது போன்றவற்றை வெளிப்படுத்தும் படல். பத்மப்ரியா ராகவன், தாமரை, சுந்தரமூர்த்தி ஆகியோரின் சிறப்பான முயற்சிகளை பாராட்டுகிறேன். ஸ்லோ பாய்ஸனாக ரசிகர்கள் மனதில் இறங்கிக் கொண்டிருக்கும் இந்த அழகான பாடலை கொடுத்த மூவரையும் பிரித்து பார்க்க முடியாது. தாமரை எப்பொழுதும் உணர்ச்சிகளின் அமுதம், அவரின் பாடல் வரிகள் மூலம் நிபந்தனையற்ற அன்பின் மேன்மையை உயர்த்துவார். பாடல் உருவாக்கும்போது சுந்தரமூர்த்தி பாடல் வரிகளும், குரலும் மிக தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்தினார். இதனால் மென்மையான இசையை இழை விட்டிருந்தார், அது தான் பாடலில் தாக்கத்தை தீவிரப்படுத்தியது. பாடலில் வெற்றிக்கு பத்மப்ரியா ராகவனின் பங்கும் மிக முக்கியமானது. காட்சிகளும், பாடலின் சூழ்நிலையும் மற்றும் நயன்தாராவின் பிரம்மாண்டமான திரை ஆளுமையும் பாடலுக்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என நம்புகிறேன் என்றார். 

நயன்தாராவின் நடிப்பைப் பற்றி அவர் கூறும்போது, "இது அவரது 63வது திரைப்படமாகும். படத்தை இயக்கும்போது அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக 'பவானியின்' கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் மேலும் நயன்தாராவுடன் கலையரசன் மற்றும் யோகிபாபு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்  என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.