சமீபத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியானப்படம் காப்பான். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களுடன் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் புவனகிரியில் சில கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மேளதாளத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுக்கச் சொல்லியுள்ளார். அப்போது அவர் போட்ட ஒரே ஒரு நிபந்தனை, ஒருவரை ஒருவர் காப்பி அடிக்கக் கூடாது என்பதே.
இதில் அந்த மாணவர்கள் எழுதிக் கொடுத்த கடிதத்தை வாசித்துப் பார்த்த அம்பேத்கர் மிரண்டு போய்விட்டார். கடிதத்தை மாணவர்கள் தமிழில் பல்வேறு பிழையுடன் எழுதியுள்ளனர். ஒரு மாணவர் காவல் ஆய்வாளர் என்பதற்குப் பதிலாக ஆவ்யாளர் என்றும், மற்றொருவர் விலாசம் என்பதற்குப் பதில் விளாசம் என்றும் எழுதியுள்ளனர்.
இந்தக் கடிதத்தை அம்பேத்கர் தனது முகநூல் பக்கத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அதில், ’இப்படியே நிலைமை போனால் யார் 'காப்பான்' இவர்களையும் இவர்களின் தமிழையும் ...?’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: