திரைத்துறையைச் சேர்ந்த 18 சங்கங்களுடன் இணைந்து பெங்களூரிலுள்ள பானஷங்கரி தபால் அலுவலகத்தின் அருகே வேலையற்று தவித்து வரும் திரை ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் இந்தப் பணியை இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இந்தப் பணியைத் தொடக்கி வைத்து பேசிய தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திரைத்துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு உதவும் சுதா மூர்த்தியின் பணிகளை பெரிதும் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் திரைத்துறை சங்கத்தின் துணைத் தலைவர், இன்ஃபோசிஸ் நிறுவனர் பிரசாந்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: #1YearForClassicJersey - கனவுகளைத் தொலைத்தவர்களுக்கு உத்வேகம்...