சீனாவில் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனாவால் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
சினிமா நட்சத்திரங்களும் கரோனாவின் பிடியில் இருந்து தப்பவில்லை. அந்த வகையில் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரிஸ் நடிகை இந்திரா வர்மா தனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் தாக்கம் அதிகமாக உள்ளதால் படுத்தபடுக்கையாக இருக்கிறேன். அதனால் யாரும் கரோனா வைரஸை எளிதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்’’ என்று கூறியுள்ளார். இந்த செய்தி இந்திரா வர்மா ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நானே சொல்றேன்… ஆனா இப்ப அது இல்ல - கர்ப்ப வதந்திகளுக்கு சோனம் கபூர் பளிச்